கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 10 பேர் கைது
- ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் போலீசார் அனுமன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசார ணையில் அவரது பெயர் ரகுபிரசாத் (19), என தெரிய வந்தது- அவரை கைது செய்தனர். அதே போல பர்கூர் அச்சமங்கலம் அருகே நின்ற நபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் 25 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது-. இதை யடுத்து அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் ராமமூர்த்தி (24), பர்கூர் அருகே உள்ள கனமூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீ சார் கண்கா ணித்தனர். அந்த வகையில் கிருஷ்ண கிரி, ஓசூர், தேன்கனிக கோட்டை, ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.850 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பேரிகை, ராயக்கோட்டை, ஊத்தங்க ரை, சிங்காரப்பேட்டை பகுதியில் குட்கா விற்பனை செய்ததாக 4 பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, பர்கூர், நாகர சம்பட்டி, சிங்கா ரப்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1400 பறிமுதல் செய்தனர்.