செய்திகள்
பார்த்திபன்

அரசியலுக்கு வருவேன்- பார்த்திபன்

Published On 2020-12-15 20:33 IST   |   Update On 2020-12-15 22:54:00 IST
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.

கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.  தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்.

Similar News