செய்திகள்

பி.எம்.டபுள்யூ.நிறுவனத்துக்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்கும் தென்கொரியா

Published On 2018-12-25 08:59 GMT   |   Update On 2018-12-25 08:59 GMT
பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. #BMW



தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது.

இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது.

கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-

போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  #BMW
Tags:    

Similar News