செய்திகள்
ஆகஸ்டு மாதத்தில் அதிகம் விற்பனையான செடான் கார்
ஆகஸ்டு மாத நிலவரப்படி இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் இடம்பிடித்துள்ளது. இது ஏற்கனவே முதலிடத்தில் இருந்த மாருதி சுசுகி மாடலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தன் செடான் மாடலான டிசையர் ஆகஸ்டு மாத விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்த நிலையில், முதல்முறையாக டிசையர் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் சமீபத்திய தகவல்களின் படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 10 கார் மாடல்களில் ஆகஸ்டு மாத நிலவரப்படி ஏழு மாடல்கள் மாருதி சுசுகி வாகனங்கள் என்றும் மற்ற மாடல்கள் ஹூன்டாய் மோட்டார் நிறுவனத்துடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட புதிய டிசையர் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 26,140 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதே மாதத்தில் 24,521 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பழைய டிசையர் மாடல்கள் 15,766 யுனிட்கள் விற்பனையான நிலையில், 20,919 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத விற்பனையில் முதல் 10 கார்களில் பலேனோ மாடல் 17,190 யுனட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 8,671 பலேனோ மாடல்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த பட்டியலில் விடாரா பிரெஸா 14,396 யுனிட்கள் விற்பனையாகி நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 9,554 யுனிட்களை விற்பனை செய்து எட்டாவது இடத்தில் இருந்தது. வேகன் ஆர் மாடல் ஐந்தாவது இடத்தில் 13,907 யுனிட்களை விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாடல் 14,571 யுனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடம் பிடித்தது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 12,631 யுனிட்கள் விற்பனையாதைத் தொடர்ந்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. ஹூன்டாய் ஹேட்ச்பேக் கிரான்ட் ஐ10 ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் 12,306 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 12,957 யுனிட்கள் விற்பனையானது.
பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான எலைட் ஐ20 எட்டாவது இடத்திலும், எஸ்.யு.வி. கிரெட்டா மற்றும் செலரியோ முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ரெனால்ட் நிறுவனத்தின் குவிட் மாடல் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.