செய்திகள்

விரைவில் வெளியாகும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்

Published On 2017-08-12 15:55 IST   |   Update On 2017-08-12 15:55:00 IST
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. விரைவில் வெளியிடப்பட இருக்கும் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி: 

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெக்சா விநியோகஸ்தர்களிடம் முன்பதிவு செய்யப்பட இருக்கும் எஸ்-கிராஸ் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-கிராஸ் முதல் பதிப்பு அதிகம் விற்பனையாகாத நிலையில், விலை குறைக்கப்பட்ட எஸ்-கிராஸ் இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய வடிவமைப்பில் எஸ்-கிராஸ் முன்பக்கம் பார்க்க அழகாகவும், பெரிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் தோற்றத்தை வித்தியாசமாக்கியுள்ளன. இத்துன் முன்பக்க கிரில் சற்று அகலமாகவும், குரோம் ஃபினிஷ் மற்றும் பம்ப்பர்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 



பக்கவாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், பின்புற டெயில் லைட்கள் எல்இடி கொண்டு வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படுகிறது. 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு 89HP செய்ல்திறனை 4,000 rpm மற்றும் 200 Nm டார்கியூ 1,750 rpm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.  

இத்துடன் 1.6 லிட்டர் டர்போ டீசல் யுனிட் 118HP செய்ல்திறனை 3,750 rpm மற்றும் 320 Nm டார்கியூ 1,750 rpm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும் M15 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1490சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் 100HP செய்ல்திறனை 5900 rpm மற்றும் 133 Nm டார்கியூ 4100 rpm செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

Similar News