செய்திகள்

டாடா நெக்சன் எஸ்.யு.வி உற்பத்தி துவக்கம்

Published On 2017-07-21 16:46 IST   |   Update On 2017-07-21 16:46:00 IST
டாடா மோட்டார்ஸ் நிறுனத்தின் நெக்சன் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்டு தயாராகும் நெக்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:

டாடா மோட்டார்ஸ் நிறுனத்தின் புதிய நெக்சன் எஸ்.யு.வி. உற்பத்தி மகாராஷ்டிரா மாநிலத்தின் ரங்கான்கோன் ஆலையில் துவங்கியுள்ளது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ள நெக்சன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்.யு.வி. முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் சர்வதேச சந்தையில் பிரபலமான AVL, போஷ், மஹேல் மற்றும் ஹனிவெல் போன்ற தொழில்நுட்ப விநியோகஸ்தர்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. 

இதன் பெட்ரோல் வேரியன்ட் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவட்ரான் மோட்டார், டீசல் இன்ஜின் நான்கு-சிலிண்டர் ஆயில் பர்னர் கொண்டுள்ளது. நெக்ஸ்ட்-ஆன் என்பதன் சுருக்கமான நெக்சன் அடுத்த வகை பொருட்களை குறிக்கிறது. புதிய எஸ்.யு.வி. போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சம் 110ps செயல்திறனை 3750 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது. மூன்று டிலிண்டர் பெட்ரோல் இன்ஜினஅ அதிகபட்சம் 110ps செயல்திறனை 5000 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது. 

இந்தியாவில் புதிய டாடா நெக்சன் விலை ரூ.7.00 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News