வணிகம் & தங்கம் விலை

பங்குச்சந்தை சரிவு - ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்

Published On 2024-12-21 10:48 IST   |   Update On 2024-12-21 10:48:00 IST
  • கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
  • வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.

இதே போல் மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  

Tags:    

Similar News