ஐ.பி.எல்.(IPL)
குன்னம் தொகுதியில் சுயேட்சையின் ‘பானை’யால் தி.மு.க. நிர்வாகிகள் கலக்கம்
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.
அரியலூர்:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சின்னத்துடன் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறக்கி உள்ளது.
இந்தநிலையில் மற்ற தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. இது ஒரு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிக்குட்பட்ட குன்னம் தொகுதியிலும் பானை சின்னம் வரையப்பட்டது.
இந்தநிலையில் தற்போது அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக இருப்பாரோ என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குன்னம் சட்டசபை தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கணிசமான அளவுக்கு இருக்கின்றன. அவர்களது வாக்குகள் பானை சின்னத்துக்கு விழுந்து விடுமோ என்று தி.மு.க.வினர் இடையேஅச்சம் எழுந்துள்ளது.
அதுபோல அந்த தொகுதியில் போட்டியிடும் மற்றொரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒளிரும் பேனா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் உதயசூரியன் சின்னம் போன்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலும் வாக்குகள் சிதறக்கூடும் என்று தி.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சின்னத்துடன் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறக்கி உள்ளது.
இந்தநிலையில் மற்ற தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. இது ஒரு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.சிவக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களில் சுயேட்சையாக ராவணன் என்பவரும் நிற்கிறார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.