செய்திகள்
ஜெயங்கொண்டம் தொகுதி

ஜெயங்கொண்டம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-05 12:45 GMT   |   Update On 2021-03-05 12:45 GMT
தி.மு.க. 4 முறை, அ.தி.மு.க. 4 முறை, காங்கிரஸ் 4 முறை வென்ற ஜெயங்கொண்டம் தொகுதியின் கண்ணோட்டம்.
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஜெயங்கொண்டமும் ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 தொகுதிகளை கொண்டது. தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் பெரிய கோவிலை கட்டினான். அவரது மகன் ராஜேந்திரசோழன் கங்கை கொண்டசோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றார். அதன் நினைவாக தஞ்சை பெரிய கோவிலை போல கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்தார். யுனெஸ்கோ நிறுவனம் இந்த கோவிலை உலக புராதன சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க கோவில் ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ளது.



சோழ மன்னரால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான பொன்னேரி. இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது இந்தியாவிலேயே பழுப்பு நிலக்கரி உள்ள பகுதி ஜெயங்கொண்டம் பகுதியாகும். 1991-ல் வெற்றி பெற்ற கே.கே. சின்னப்பன் ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததும், 2006-ல் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்ததும் அரசியலில் பரப்பரப்பாக பேசப்பட்டதும் ஜெயங்கொண்டம் தொகுதியாகும்.



ஜெயங்கொண்டம் தொகுதியில் 1 நகராட்சி, 2 பேரூராட்சி, ஜெயங்கொண்டம், தா.பழுர் என 2 ஊராட்சி ஒன்றியங்களும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 35 கிராம ஊராட்சிகளும், தா.பழுர் ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும் உள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் 1,31,663 ஆண்வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், இதர 3 வாக்காளர்கள் உட்பட 2,66,013 வாக்காளர்கள் உள்ளனர்.



இதுவரை நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.



2011-ல் நடைபெற்ற தேர்தலில் பேட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் இளவழகனை (77,601) விட பா.ம.க. வேட்பாளர் ஜெ.குரு (92,739), 15,138 வாக்குகள் பெற்று பா.ம.க. வெற்றி பெற்றது. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் பாமக வேட்பாளர் ஜெ.குருவை (53,380) விட அ.தி.மு.க. வேட்பாளர் ராம ஜெயலிங்கம் (75,431) 23,051 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர் ஓட்டாகதான் உள்ளது.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

ஜெயங்கொண்டத்தில் அனல் மின்  நிலைய பணி துவங்கப்படவேண்டும், பணிகள் துவங்கப்படாத நிலை ஏற்பட்டால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.



தா.பழுர் ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், நெசவாளர்களுக்கு கைத்தறி ஜவுளி பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்க முந்திரி தொழிற்சாலை, ஜூஸ் தொழிற்சாலை, வாசனை திரவியங்கள் தொழிற்சாலை அமைக்க வேண்டும், பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆழப்படுத்த வேண்டும், முந் திரி கொட்டைகளை அரசே கொள்முதல் செய்யவேண்டும், பொன்னேரிக்கும், சுத்தமல்லி நீர்தேக்கத்திற்கும் கொள்ளி டம் ஆற்றுநீரை வாய்க்கால் மூலம் கொண்டு வர வழித்தடம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தேர்தல் வெற்றி




1952 கே.ஆர்.விஸ்வநாதன் (சுயேட்சை)
1957 கே.ஆர்.விஸ்வநாதன் (காங்கிரஸ்)
1962 ஜெகதாம்பாள் வேலாயுதம் (தி.மு.க.)
1967 ஏ-.கே.மூர்த்தி (தி.மு.க.)
1971 சின்னசாமி (தி.மு.க.)
1977 கருணாமூர்த்தி (அ.தி.மு.க.)
1980 தங்கவேல் (காங்கிரஸ்)
1984 மாசிலாமணி (காங்கிரஸ்)
1989 கணேசன் (தி.மு.க.)
1991 சின்னப்பன் (காங்கிரஸ்)
2001 அண்ணாதுரை (அ.தி.மு.க.)
2006 ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
2011 ஜெ.குரு (பா.ம.க.)
2016 ராமஜெயலிங்கம் (அ.தி.மு.க.)

தி.மு.க. 4 முறை, அ.தி.மு.க. 4 முறை, காங்கிரஸ் 4 முறை, பா.ம.க. ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
Tags:    

Similar News