செய்திகள்
நெற்பயிர்

வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை

Published On 2021-08-14 05:18 GMT   |   Update On 2021-08-14 08:58 GMT
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

‘வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும்.

இயற்கை எருவை பயன்படுத்தும் உழவர்களின் பட்டியல், இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம் தோறும் தயாரிக்கப்படும். இயற்கை எருவை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News