செய்திகள்
பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மனுதாக்கல்
பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம்:
பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி.முனுசாமி, தி.மு.க. சார்பில் இன்பசேகரன், மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நஞ்சப்பன் போட்டியிடுகிறார்கள்.
பா.ம.க. வேட்பாளர் அன்பு மணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதே போல மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மேகநாத ரெட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலையும், தி.மு.க. கூட்டணியில் மக்கள் தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தீபனும், தே.மு.தி.க. வேட்பாளராக பூபதியும் போட்டியிடுகிறார்கள்.