செய்திகள்

சி.ஆர்.சரஸ்வதி பல்லாவரம் தொகுதியில் தோல்வி

Published On 2016-05-19 22:24 IST   |   Update On 2016-05-19 22:24:00 IST
அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னை பல்லாவரம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
சென்னை:

சென்னை பல்லாவரம் தொகுதியில் திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திமுக சார்பில் வேட்பாளராக கருணாநிதி என்பவரும், அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கடும் போட்டியின் முடிவில் சி.ஆர்.சரஸ்வதி 90,726 வாக்குகள் பெற்று 22 ஆயிரத்து 165 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் கருணாநிதி 1,12,891 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவர்களுக்கு அடுத்தபடியாக மதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வீரலட்சுமி 14,083 வாக்குகள் பெற்று மூன்றாவது  இடத்தை பிடித்துள்ளார். பா.ஜ.க வேட்பாளருக்கு 11,781 வாக்குகள் கிடைத்தன.

Similar News