செய்திகள்
இலுப்பூரை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றிய அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றார்.
விராலிமலை:
அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இலுப்பூர் பேரூராட்சி மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான இலுப்பூருக்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர் புதிய போக்குவரத்து பணிமனை, புதிய பேருந்து நிலையம், சார் நிலை கருவூலம், இலுப்பூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு, இலுப்பூரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய புதிய புறவழிச் சாலை, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய ஆர். டி.ஓ. அலுவலகம், இலுப்பூர் சிவன் கோவில் மேம்பாடு செய்தல், நவீன பயணியர் நிழற்குடைகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிட வசதி, பயணியர் மாளிகை, இலுப்பூரிலிருந்து சென்னை, குமுளி, திருப்பதி போன்ற பல புதிய பேருந்து வழித் தடங்கள், புதிய அங்காடி கட்டிடங்கள், இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட சாலைகளை மேம்பாடு செய்தல் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இலுப்பூர் பேரூராட்சியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றியுள்ளார்.
எனவே மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அவருடன் இலுப்பூர் நகர செயலாளர் சத்யா கே.ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் குருபாபு உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் சென்றனர்.