செய்திகள்
நடுநிலையாளர்கள், இளைஞர்கள் தே.மு.தி.க. கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்: பிரேமலதா பேட்டி
நடுநிலையாளர்கள், இளைஞர்கள் தே.மு.தி.க. கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் என்று பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை:
அதன் விவரம்:-
கேள்வி: உங்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர். இது உங்கள் கட்சியின் நிலையற்ற தன்மையை காட்டுகிறதே?
பதில்: விஜயகாந்த்தை பொறுத்தவரை மற்ற கட்சிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் தங்களுடைய சொந்த நலனுக்காக, தனிப்பட்ட ஆதாயத்துக்காக இப்படி நடந்து கொள்கின்றன. எல்லாம் முடிந்து போன விஷயம். தே.மு.தி.க. என்பது விஜயகாந்த்தை தலைவராக கொண்ட ராணுவ படை.
கே: தே.மு.தி.க. கட்சி மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்வதா? அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதா? என்ற உறுதியற்ற தன்மையில் இருந்ததே. இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?
ப: நாங்கள் எந்த அணியில் இருந்தாலும் அதற்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் ஊடகங்கள் தான் இதுபற்றி தவறான தகவல்களை பரப்பின. கூட்டணி தொடர்பாக மக்கள் மத்தியில் வதந்தி கிளப்பப்பட்டது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.
கே: தி.மு.க.வுடன் கூட்டணி சேர விஜயகாந்த் ஆலோசித்ததாகவும், சீட் எண்ணிக்கை தொடர்பாக விவாதங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறதே?
ப: ஆலோசனைகளை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. விஜயகாந்த் புதுப்படம் வெளியாகும்போது எங்கள் வீட்டு சமையல்காரர், டிரைவர், பாதுகாவலர் என அனைவரிடமும் கருத்துக்களை கேட்பார். எந்த விஷயமானாலும் இறுதி முடிவை அவர்தான் எடுப்பார். நான் உள்பட யார் ஆலோசனை கூறினாலும் அதை நிராகரித்து விடுவார்.
கே: பா.ஜனதாவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது.
ப: இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஊடகங்கள் தான் இதுபற்றி வேறு விதமாக தகவலை பரப்பி விட்டன. 2014 பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அது நல்லபடியாக சென்றது. பா.ஜனதா தலைவர் தமிழிசை எங்களது பக்கத்து வீட்டுக்காரர். என்னை அக்கா என்று அழைப்பார். அவர் விஜயகாந்த்தை சந்திப்பதற்காக மத்திய மந்திரி ஜவடேகரை அழைத்து வந்தார். அது ஒரு மரியாதை சந்திப்பாகும். அந்த நேரத்தில் நாங்கள் கூட்டணி பற்றி அவர்களுடன் எதுவும் பேசவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும், இதர கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இருப்பதால் அவர்களால் எங்கள் கூட்டணிக்கு வரமுடியவில்லை.
கே: தே.மு.தி.க. உள்பட மற்ற கட்சிகளெல்லாம் ஏதாவது ஒரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தானே கடந்த காலங்களில் தேர்தலை சந்தித்து இருக்கிறீர்களே. இதுபற்றி மக்களிடம் எப்படி விளக்குவீர்கள்.
ப: 2005-ல் கட்சி தொடங்கும்போது யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் 2011 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்சியில் உள்ள பெரும்பான்மையானோர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியதால் விஜயகாந்த் அந்த முடிவை எடுத்தார். அந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தே.மு.தி.க. எதிர்பார்த்தது. இதற்காக ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் 3 மாதம் அவகாசம் கொடுத்து மவுனம் காத்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. தலைவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்று கூறிய அவர் பஸ் கட்டணத்தை உயர்த்தினார், மின் கட்டணத்தை உயர்த்தினார், பால் கட்டணத்தை உயர்த்தினார். பால் அத்தியாவசிய பொருளாக இருந்தும் அதன் விலை உயர்த்தப்பட்டது. இப்படி ஏன் செய்தார்கள் என்று கேட்டபோது அதற்கு உரிய பதில் இல்லை.
சட்டசபையில் விஜயகாந்த்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டனர். எனவே அவர் சட்டபைக்கு செல்லவில்லை. மக்கள் பிரச்சினை தொடர்பாக எந்த விவாதமும் நடக்கவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் விஜயகாந்த் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தார்.
கே: உங்கள் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் மிகப்பெரிய கட்சிகளை எதிர்த்து நிற்கிறீர்கள். இதை எப்படி சமாளிக்கிறீர்கள்.
ப: எங்கள் கட்சி 40 வருட பழைய கட்சி. 1981-ல் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் வெளிவந்த போதே எங்களுக்கு ஒரு வலுவான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். அதன்பிறகு இது கட்சியாக மாறி இருக்கிறது.
கே: விஜயகாந்த் பேசுவது சரியாக புரியவில்லை என்று கூறுகிறார்கள். அவருக்கு ஏதாவது உடல்நிலை பிரச்சினை உள்ளதா?
ப: யாராக இருந்தாலும் 25 வயதில் செய்ததை 50 வயதில் செய்ய முடியாது. அதில் ஒரு வித்தியாசம் ஏற்படும். விஜயகாந்த்தை போல பக்கம் பக்கமாக வசனம் பேசி எந்த நடிகரும் நடித்தது இல்லை. அவர் அரசியல் கூட்டங்களில் பேசுவதும் பிரமாண்டமாக இருந்தது. அவர் அரசியல் பேச்சில் பல சாதனைகள் புரிந்துள்ளார். இது சம்பந்தமாக இனி அவர் நிரூபிக்க வேண்டியதில்லை. என் கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொள்கிறேன். தீர்க்கமான முடிவு எடுப்பது, தன்னம்பிக்கை, தைரியம், பொதுக்கூட்டங்களில் எப்படி பேசுவது, என எல்லாவற்றையும் அவர்தான் கற்றுத்தருகிறார்.
விஜயகாந்த் பேச்சை எல்லோருமே புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சைனஸ் பிரச்சினை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.