செய்திகள்

கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - பரபரப்பை ஏற்படுத்திய ஆ.ராசா பேச்சு

Published On 2018-07-14 13:49 IST   |   Update On 2018-07-14 13:49:00 IST
மகாபாரத கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்க தலைவர் என முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ARajaControversy #KarunanidhiBirhday
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார். விழாவில் ஆ.ராசா பேசியதாவது:-

மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன்.  ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.

பஞ்சபாண்டவர்கள் தனித்தனியாக சென்று பிடித்துப் பார்த்தார்கள். கடைசியாக சகாதேவன் தான் கண்ணனின் மூலத்திருவடியை சிக்கென பற்றிக்கொண்டான் என்று மகாபாபரத்தில் உள்ளது.



இப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.

இவ்வாறு ராசா பேசினார். #ARajaControversy #KarunanidhiBirhday




Tags:    

Similar News