செய்திகள்

நீண்ட தூர அரசு பஸ்களில் தட்கல் முன்பதிவு அறிமுகம்

Published On 2018-07-10 07:40 GMT   |   Update On 2018-07-10 07:40 GMT
ரெயில்களில் தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு கடைபிடிக்கப்படுவது போன்று அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் தட்கல் முறையில் முன்பதிவு திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. #GovtBus #TNGovt
சென்னை:

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் உள்ளன.

இதில் சுமார் 1,100 பஸ்கள் நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களாகும்.

தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களின் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியது. இதன் காரணமாக அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போதுதான் இந்த வருவாய் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஆதாரத்தை உயர்த்தும் வகையிலும் புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்காக 5 மாதங்களுக்கு உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி ரெயில்களில் தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு கடைபிடிக்கப்படுவது போன்று அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் தட்கல் முறையில் முன்பதிவு திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நீண்ட தூர பஸ்கள் 85 சதவீதம் பயணிகளுடன் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களில் டிக்கெட் தேவை அதிகரித்தப்படி உள்ளது.

இந்த நிலையில் தட்கல் முறையை அமல் செய்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாயை பெற முடியும் என்று கருதப்படுகிறது.

கோப்புப்படம்

சமீபத்தில் அரசு நீண்ட தூர எக்ஸ்பிரஸ் பஸ்களில் படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பஸ்களிலும் தலா 4 படுக்கைகளை தட்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு எக்ஸ்பிரஸ் போக்குவரத்து கழகங்களுக்கு 15 முதல் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அரசு நீண்ட தூர பஸ்களை பொறுத்தவரை சென்னை - மதுரை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-திருச்செந்தூர், சென்னை-நாகர்கோவில், சென்னை-தூத்துக்குடி, சென்னை - கோவை, சென்னை-கோவில்பட்டி ஆகிய வழித்தடங்களுக்கு அதிக பயணிகள் வருகிறார்கள். எனவே இந்த வழித்தடங்களில் தட்கல் முறை முதல்கட்டமாக விரைவில் அமலுக்கு வர உள்ளது. #GovtBus #TNGovt
Tags:    

Similar News