செய்திகள்

தினகரன் அணி அழிவுபாதையில் செல்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2018-04-29 05:27 GMT   |   Update On 2018-04-29 05:27 GMT
தினகரன் அணி அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MinisterPandiarajan

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினகரன் மற்றும் திவாகரன் பேசுவது அவர்களது குடும்ப பிரச்சினை. தற்போது தினகரன் அணி அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் அப்பொழுது அ.தி.மு.க. முழு வலிமை பெறும் என்பதே முதல்வர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்து.

அதனைத் தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் வழங்கிய தீர்ப்பில் அரசியல் தலையீடு இருப்பதாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, சபாநாயகரின் அதிகாரத்திற்கும், நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் உள்ள நிலையை உயர்நீதிமன்ற நீதிபதி தெளிவாக விளக்கி இருப்பதாகவும், இந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு, நீதி நிலை நிறுத்தப்பட்டப்பட்டுள்ளது.


இதே போல் தினகரன் அணியினரின் 18 எம்.எல்.ஏ.க்களின் அந்த வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

புதுச்சேரியில் தூய்மையாக இருந்தால் தான் இலவச அரிசி என்ற ஆளுநரின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாத வி‌ஷயம், புதுச்சேரி அ.தி.மு.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அது போன்ற நிலை ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் #TTVDhinakaran #MinisterPandiarajan

Tags:    

Similar News