செய்திகள்

டி.ஜி,பி, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- தி.மு.க.வினர் கைது

Published On 2018-04-27 04:33 GMT   |   Update On 2018-04-27 04:33 GMT
குட்கா விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. பதவி விலக வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். #GutkhaScam #DMKprotest #DGPOffice
சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றனர். ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தை நெருங்கியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டனர்.


தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் காந்தி சிலை அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #GutkhaScam #DMKprotest #DGPOffice
Tags:    

Similar News