செய்திகள்

தமிழகத்தின் நலனை காக்க அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்- தம்பிதுரை

Published On 2018-03-01 10:55 GMT   |   Update On 2018-03-01 10:55 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தினால் தமிழகத்தின் நலனை காக்க அ.தி.மு.க. போராட்டம் நடத்தும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை நிலை நாட்டினார். தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கர்நாடக அரசு தமிழக அரசை ஆலோசிக்காமல் எந்த அணையும் கட்ட கூடாது என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.


காவிரி பிரச்சனையில் கர்நாடகம் எந்தவிதமான சட்டத்திற்கும், நியாயத்திற்கும் கட்டுப்படுவதில்லை. பிரதமர் சென்னை வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வரும், துணை முதல்வரும் கோரிக்கை மனு அளித்தனர். பிரதமரும் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

நீதிமன்ற ஆணைப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் நியாயத்தை நிலை நாட்ட குரல் கொடுப்போம். தமிழத்தின் நலம் காக்க அ.தி.மு.க. போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் தமிழ் உணர்வு மதிப்பளிக்க வேண்டும். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழில் தான் பாடவேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் இருந்தார். #Tamilnews
Tags:    

Similar News