செய்திகள்
காவிரி பிரச்சனையில் அரசியல் தலைவர்கள் வாயை மூடி இருந்தாலே போதும்- எச்.ராஜா
காவிரி பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே தானாக மத்திய அரசு நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் என எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தடிகொண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஒரு அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அந்த இடத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38ஆயிரத்து 635 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களுக்கு சொந்தமாக 29 கோடி சதுர அடி நிலம் உள்ளது.
ஆனால் இவற்றை முறையாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்காமல் இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இவற்றை முறையாக பராமரிப்பு செய்து இருந்தாலே வருடத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும்.
தமிழக அரசு சார்பில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே தானாக மத்திய அரசு நீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்றும். காவிரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்கு தி.மு.க. தான் காரணம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தற்போது ஆங்காங்கு கைது செய்யப்பட்டு வரும் தீவிரவாதிகளே சாட்சி. மற்ற மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் செய்வதற்கு தமிழகத்தை பயிற்சி மையமாகவும் திட்டமிடுதலுக்கும் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.
ஒரு சில அமைப்புகள் தற்போது பிணங்களை கடத்தி விற்பனை செய்தும் மனித உறுப்புகளை திருடியும் வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. முன்னேறி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மம்தா பானர்ஜி ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளை மூடி வருகிறார்.
நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வாழ்த்துகிறேன். ஆனால் இந்த கட்சியால் எந்த பயனும் ஏற்பட போவது கிடையாது. ஒருவேளை பலன் ஏற்படும் என்றால் அது தி.மு.க.வைத்தான் பாதிக்கும். மற்ற கட்சிகளை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews