செய்திகள்

அ.தி.மு.க. விரைவில் பிளவுபடும் - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-02-17 14:42 IST   |   Update On 2018-02-17 14:42:00 IST
தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. அ.தி.மு.க. விரைவில் பிளவுபடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு உரிய சட்ட ஆலோசகர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வேண்டிய அழுத்தம் கொடுத்து இருந்தால் 253 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. விரைவில் அ.தி.மு.க. பிளவுபடும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து விட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தான் செயின்பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தீவிரவாத பயிற்சி நடைபெற வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இதை அரசியலாக பார்க்காமல் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews


Similar News