செய்திகள்

சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது - தமிழிசை குற்றச்சாட்டு

Published On 2018-02-17 13:38 IST   |   Update On 2018-02-17 13:38:00 IST
தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் தோல்வி அடைந்து விட்டது என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது. அது குறித்தான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை.

மேலும் தீவிபத்து குறித்து விசாரிக்க பா.ஜனதா சார்பில் ஒரு குழு அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. விரைவில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சரை சந்தித்து பழமையான சிற்பங்களை பாதுகாக்க கோரிக்கை வைப்போம்.

காவிரி நதிநீர் தீர்ப்பு மனவேதனை அளிக்கிறது. தமிழக அரசு விரைவில் சட்ட ஆலோசகர்களை அழைத்து பேசி சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தோல்வி அடைந்து விட்டது.

பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி இருப்பது அரசியல் சார்ந்த விவகாரம் என்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News