செய்திகள்

தஞ்சையில் தினகரன் 4 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2018-01-30 10:28 IST   |   Update On 2018-01-30 10:28:00 IST
தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளான திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட தொகுதிகளில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் பொது செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின்படி செயல்படும் நாம் ஜெயலலிதாவின் கொள்கைகளை ஆண்டாண்டு காலத்திற்கு நிலைநிறுத்திட டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளார்.

முதற்கட்டமாக தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளான திருவிடைமருதூர் தொகுதியில் 2-ந் தேதி, குடந்தை தொகுதியில் 3-ந் தேதி, பாபநாசம் தொகுதியில் 4-ந் தேதி, திருவையாறு தொகுதியில் 5-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக மக்களை அனைத்து தொகுதிகளிலும் சந்திக்க உள்ள அவரது மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் பொன் வாழ்வை தமிழக மக்களுக்கு படைக்கட்டும்.

தமிழ் சமூகத்தின் எதிர்கால ஏற்றத்திற்கான இந்த மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews

Similar News