செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2017-11-26 11:58 IST   |   Update On 2017-11-26 11:58:00 IST
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது. இதனை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்துடன் எங்களின் வெற்றிப் பயணம் என்றும் தொடரும். ஆர்.கே. நகர் தொகுதியில் அ.திமு.க. மகத்தான வெற்றியை பெரும்.

வருகிற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னத்துடன் அ.தி.மு.க, வெற்றிகளை மட்டுமே பெரும்.

ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்று கேட்கிறீர்கள். இதுபற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி உரிய முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மரகதம் குமரவேல் எம்பி. முன்னாள் எம்எல்ஏ வி.சோமசுந்தரம். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம் நிர்வாகிகள் வள்ளிநாயகம், அத்திவாக்கம் ரமேஷ். அக்ரி நாகராஜன், தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News