செய்திகள்

தேசிய கொடி அவமதிப்பு வழக்கு: பாண்டியராஜனுக்கு முன்ஜாமீன்

Published On 2017-04-18 14:21 IST   |   Update On 2017-04-18 14:21:00 IST
தேசிய கொடியை அவமதித்ததாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பிரசாரம் செய்தார். அப்போது, தேசிய கொடி போர்த்தப்பட்ட ஜெயலலிதாவின் மெழுகு உருவ பொம்மையை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாகவும், தேசிய கொடியை அவமதித்ததாகவும் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் உட்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மா.பா.பாண்டியராஜன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனுதாரர் பாண்டியராஜனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Similar News