செய்திகள்

ஆர்.கே.நகரில் முதியோர் உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்வேன்: மருதுகணேஷ் வாக்குறுதி

Published On 2017-04-06 15:51 IST   |   Update On 2017-04-06 15:51:00 IST
ஆர்.கே.நகரில் முதியோர் உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்வேன் என்று தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் சுதர்சனம் தலைமையில் 42-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைகுழி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் மருதுகணேஷ் முதியோர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பெரும்பாலான முதியவர்கள் மற்றும் விதவைகள் மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் சரிவர கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அந்த ஓய்வூதியத்தை கிடைக்கப் பெறவும், இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரவும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும் பாடுபடுவேன். என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பொதுமக்களும் தங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என்று உறுதி அளித்தனர்.

அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

Similar News