செய்திகள்

காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்: செங்கோட்டையன் தகவல்

Published On 2017-02-27 10:53 IST   |   Update On 2017-02-27 10:53:00 IST
அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஆசிரியர்-ஆசிரியை பணிஇடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு ஆலோசித்து விரைவில் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி நகர் மன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று நடந்தது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வரவேற்றார்.

விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிவித்தார். இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா “லேப்டாப்” கள் வழங்கப்பட உள்ளது.

இதில் ஆங்கில மொழி குறிப்புகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஆண்டு முன்னதாகவே அரசு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியாக உள்ள ஆசிரியர்-ஆசிரியை பணிஇடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு ஆலோசித்து விரைவில் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் வாழ்க்கை தரம் உயர அரசு பள்ளிகளில் இனி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News