செய்திகள்

யாருக்கு ஆதரவு?: வாக்கு பெட்டி வைத்து கருத்து கேட்ட மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.

Published On 2017-02-13 11:07 IST   |   Update On 2017-02-13 11:34:00 IST
யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து வாக்கு பெட்டி வைத்து மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.
நாகப்பட்டினம்:

அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சி இருந்து வருகிறது. இக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அ.தி.மு.க.வில் தற்போது உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க தமிமுன் அன்சாரி முடிவு செய்தார்.

அதன் படி அவர் நாகையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்டார். இதற்காக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாக்கு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறி இருந்தார். அதன் படி இன்று காலை 9 மணிக்கு கருத்து கேட்கும் பணி தொடங்கியது.

அதில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து சீட்டுகளை எழுதி பெட்டியில் போட்டு வருகின்றனர். இங்கு மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Similar News