செய்திகள்

அதிமுக தொண்டர்களின் சொத்து, தனிக்குடும்பத்தின் சொத்தாக மாற விடமாட்டோம்: பன்னீர் செல்வம்

Published On 2017-02-10 20:10 IST   |   Update On 2017-02-10 20:10:00 IST
அதிமுக தொண்டர்களின் சொத்து. அதை தனிக்குடும்பத்தின் சொத்தாக மாற விடமாட்டோம் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘அதிமுக உறுப்பினர்களின் சொத்து. சுயநல சக்திகள் கைப்பற்ற விடமாட்டோம். அது தனிக்குடும்பத்தின் சொத்தாகாது.

எந்த குடும்பமும் கைப்பற்ற விடமாட்டோம். அதிமுகவை கைப்பற்றலாம் என்பவர்களி்ன் கனவு நிறைவேறாது’’ என்றார்.

மேலும் தனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Similar News