செய்திகள்

முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: தேனி போலீஸ் ஏட்டு பரபரப்பு பேட்டி

Published On 2017-02-10 10:24 GMT   |   Update On 2017-02-11 04:17 GMT
தமிழக முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தேனி போலீஸ் ஏட்டு அறிவித்து உள்ளார்.

உத்தமபாளையம்:

தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். (வயது 45). இவர் நேற்று மாலை தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள வெற்றிக்கொம்பன் விநாயகர் கோவில் அருகே சீருடையின் வந்து நிருபர்களை சந்தித்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் 1999 முதல் 2002 வரை பாதுகாப்பு பணியில் இருந்தேன். அவர் உடல்நலம் குன்றி இருந்த போது சென்னை வடபழனி கோவிலில் வேல்குத்தி பிரார்த்தனை செய்தேன்.

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் போலீஸ் பணியில் நீடிக்க விரும்பாமல் பணியில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன். ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது மனதை பாதித்து உள்ளது.

எந்த காரணத்தை கொண்டும் சசிகலா முதல்வர் பதவிக்கு வரக்கூடாது. அவரை பதவி ஏற்க கவர்னர் அனுமதிக்க கூடாது. மீறி அழைத்தால் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News