செய்திகள்

தமிழக மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்: அர்ஜூன்சம்பத் பேட்டி

Published On 2017-02-10 15:39 IST   |   Update On 2017-02-10 15:39:00 IST
தமிழக மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா, மு.க.ஸ்டாலின் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று அர்ஜூன்சம்பத் கூறினார்.

பண்ருட்டி:

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக அரசியல் நிலவரம் தெரிந்த ஒருவரையே மத்திய அரசு, தமிழகத்துக்கு நிரந்தர கவர்னராக உடனடியாக நியமிக்க வேண்டும்.

தமிழக மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா, மு.க.ஸ்டாலின் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எம்.எல்.ஏ.க் களை கடத்துவது என்பது தமிழகத்துக்கு புதிதல்ல. இவை திராவிட கட்சிகளின் கலாச்சாரம்.

உயர் மதிப்புள்ள பண ஒழிப்பு நடவடிக்கையால் மோடி உலக தலைவராக உயர்ந்துள்ளார். இதில் மக்களுக்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் உள்ளனர். இதை தடுக்க கோவை, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் மத்திய புலனாய்வு துறை அலுவலகங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News