செய்திகள்
கர்நாடகத்தில் தமிழக வாலிபர் மீதான தாக்குதல் மோசமான விளைவை ஏற்படுத்தும்: பழ.நெடுமாறன் பேட்டி
கர்நாடகத்தில் தமிழக வாலிபர் மீதான தாக்குதல் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முதல் மாநில மாநாடு காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு வள்ளலார் மூட்டிய புரட்சி என்ற நூலினை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தமிழக வாலிபர் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனால் இரு மாநில உறவு பாதிக்கப்படும். இது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். காவிரி நீர் பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தீர்வு காண வேண்டும்.
ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் சென்னையில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் வள்ளலார் கோட்டத்தினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.