செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2016-09-01 12:05 IST   |   Update On 2016-09-01 17:14:00 IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம் நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.38 காசும், டீசல் விலையை ரூ.2.67 காசும் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசு கலால் வரியை முழுமையாக நீக்கிட வேண்டும்.

இனி வரும் காலங்களில் மத்திய அரசு நேரடியாக பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்திட வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நம் நாட்டில் பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை ஒரு கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News