செய்திகள்

அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகள் சட்டமன்றத்தில் இணைந்து செயல்படவேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2016-08-20 05:52 GMT   |   Update On 2016-08-20 10:15 GMT
போட்டி சட்டசபை கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சட்டமன்றத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
அவனியாபுரம்:

பாரதிய ஜனதா கட்ச யின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பெருமைக்குரிய வி‌ஷயங்களை பேச வேண்டும். 2 கட்சிகளும் சட்டசபையில் செயல்படும் விதம் வருத்தம் அளிக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டி சட்டசபை கூட்டம் நடத்துவதும், நடித்துக்காட்டுவதும் கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள், சட்டமன்றத்தில் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். இந்த கோரிக்கையை தற்போது வலியுறுத்தும் தி.மு.க. தாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் அதனை செய்யவில்லை. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால் அங்கு நடப்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து சாதகமாக்கி கொள்வார்கள். இதில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் கமி‌ஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார்.

Similar News