செய்திகள்
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய போது எடுத்த படம். அருகில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி, காடுவெட்டி குரு உள்ள

உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. அமோக வெற்றி பெறும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

Published On 2016-06-27 09:39 IST   |   Update On 2016-06-27 15:22:00 IST
உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. அமோக வெற்றி பெறும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
மயிலாடுதுறை:

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர். ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் டாக்டர். ராமதாஸ் பேசியதாவது:-

காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க. அரசு தான் காரணம். கடந்த 1924-ல் மைசூர் அரசும், சென்னை அரசும் சேர்ந்து காவிரி ஒப்பந்தம் ஆனதை 1974-ம் ஆண்டு தி.மு.க. அரசு புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.

காவிரி டெல்டாவில் மீத்தேன், ஷெல் எரிவாயு எடுக்க முயன்றால் பா.ம.க. அதனை தடுத்து நிறுத்தும். உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் பா.ம.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பா.ம.க.வுக்கு தோல்வி அல்ல. ஒரு சறுக்குதான்.

ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழகத்தில் 23 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளோம். 97 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர்.

தற்போது விற்பனை இல்லாத டாஸ்மாக் கடைகளை தான் மூடி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவித்து காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுகிறது.

இந்தியாவில் 21 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் 20-வது இடத்தில் பின் தங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News