லைஃப்ஸ்டைல்
பெண்களின் பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள்

பெண்களின் பாதுகாப்புக்கு... 5 அப்ளிகேஷன்கள்

Published On 2020-06-12 05:14 GMT   |   Update On 2020-06-12 05:14 GMT
பெண்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய சில முக்கியமான அப்ளி கேஷன்களை பற்றிய தொகுப்பு இது.
பெண்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய சில முக்கியமான அப்ளி கேஷன்களை பற்றிய தொகுப்பு இது.

ஷேக் 2 சேப்ட்டி: மிகவும் சுலபமாக பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு ‘உங்களுடைய உதவி தேவை’ என்ற செய்தியானது சென்று விடும். இதற்கு இணைய வசதி தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை பேரழிவு போன்ற காலங்களில் இது பெரும் உதவியாக இருக்கும்.

எலா: குழந்தை பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கான ஆப் தான் இது. கடைசி மாதவிடாய் சுழற்சி எப்போது ஆரம்பித்தது?, எத்தனை நாட்கள் சுழற்சி இருந்தது?, வயது போன்ற தகவல்களை இதில் பதிவிட்டால், உடலுறவிற்கு பொருத்தமான நாட்களையும், அந்த நாட்களில் எதை செய்யவேண்டும், எத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற தகவல்களையும் உங்களுக்கு கொடுக்கும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் கிடைக்கும்.

சிடோர் ஸ்குவாட்: பெண்களுக்குப் பெரிய பிரச்சினையே ‘டாய்லெட்’ உபயோகப்படுத்துவதுதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் கழிவறை எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள கழிவறை மற்றும் ஓய்வறைகளை பயன் படுத்தியவர்களின் கருத்துகள் (கமெண்ட்ஸ்) அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ஓய்வறைகளை கண்டுபிடித்து தந்து விடும். பயணமும் சுகமாக அமையும்.

ஒ.பி.ஐ: எந்த கலர் நெயில் பாலிஷ் (நகப்பூச்சு) உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை உங்களுக்கு காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால், எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..!

மிண்ட்: பட்ஜெட்டை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என தெரியவில்லையா?. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப்பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் கடன் அட்டை போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை பதிவு செய்து வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு ஒப்பிட்டு காண்பித்து விடும். கூடவே செலவை குறைக்கும் வழிமுறைகளையும் வழங்கும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்கள் மட்டுமல்ல, இத்தகைய வசதி கொண்ட, வேறு பெயரிலான அப்ளிகேஷன்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை பதிவேற்றம் செய்தும் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News