லைஃப்ஸ்டைல்
செல்போன் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்

செல்போன் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்

Published On 2020-06-10 08:28 GMT   |   Update On 2020-06-10 08:28 GMT
சென்னை, புதுடெல்லி, புனே, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில்தான் செல்போன் தொடர்புகள் மூலம் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் போக்கு அதிகமாக நடக்கிறது.
இந்தியாவில் 10 பெண்களில் 8 பேர் செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, புதுடெல்லி, புனே, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில்தான் செல்போன் தொடர்புகள் மூலம் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் போக்கு அதிகமாக நடக்கிறது. தேவையற்ற நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் தங்களுக்கு தொந்தரவாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகிறார்கள்.

சர்வேயில் பங்கேற்ற ஐந்து பெண்களில் ஒருவர், சம்பந்தமில்லாத நபர்கள் தங்களை தொடர்பு கொண்டு பேசுவதாகவும், அவர்களின் பேச்சு பாலியல் ரீதியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிராக செல்போன்கள், எஸ்.எம்.எஸ்.கள் வழியாக நடக்கும் தொந்தரவுகள் இந்தியாவில்தான் அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கென்யா, கொலம்பியா, பிரேசில் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் பெண் களுக்கு எதிராக பாலியல் ரீதியான சீண்டல்கள் செல்போன்கள் வழியாக அதிக அளவில் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

செல்போன் ரீசார்ச் செய்யும் கடைகள், ஷாப்பிங் செல்லும் இடங்கள், சில இடங் களின் வரவேற்பு அறையில் இருக்கும் புத்தகங்கள் உள்பட பல இடங்களில் பெண்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்கிறார்கள். அதன் வழியாகவும் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள் கிறார்கள். அப்படி துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களில் 85 சதவீதம் பேர் புகார் அளிப்பதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களின் எண்களை தடை (பிளாக்) செய்து வைத்துவிடுவதாக சொல்கிறார்கள். 12 சதவீதம் பேர் மட்டுமே தைரியமாக புகார் தெரிவித்து குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்கிறார்கள்.
Tags:    

Similar News