லைஃப்ஸ்டைல்

மகளிர் தினம் வந்தது எப்படி?

Published On 2019-03-08 05:55 GMT   |   Update On 2019-03-08 05:55 GMT
உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.
உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.

பழங்காலத்தில் கிரேக்க நாட்டில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போதும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராடினார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட உற்சாகம் களைகட்டி அரசரின் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றது. அந்த ஊர்வலம் அரச மாளிகையை அடைந்தது.

அங்கிருந்த மெய்க்காவலர்கள், நீங்கள் கலைந்து செல்லவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றனர். இதில் கோபம் கொண்ட போராட்டக்காரர்கள், மெய்க்காவலர்கள் இருவரை கொன்றனர். இதை அறிந்த அரசன் லூயிஸ் பிலிப் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினார். இறுதியில் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார்.

பெண்கள் ஒன்று கூடி போராடியதை அறிந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலியிலும் போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து பிரான்சில் 2-வது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்ற மன்னர் பெண்களை அரசவையின் ஆலோசனை குழுக்களில் இடம் பெறச்செய்து, பெண்களுக்கு ஓட்டளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8-ந்தேதி ஆகும்.

இதுவே மகளிர் தினம் சர்வதேச அளவில் கொண்டாட காரணமாக அமைந்தது. அதன்பிறகு 1910-ல் 17 நாடுகளில் இருந்து வந்திருந்த பெண்கள் டென்மார்க் நாட்டின் கோபன்கேஹனில் ஒன்று கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படியே உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News