பெண்கள் மருத்துவம்
கோடை காலத்தில் பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

கோடை காலத்தில் பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

Update: 2022-05-09 08:26 GMT
ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று, எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், வெப்பமான வானிலை உடலில் ஈஸ்ட் தொற்று வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
கோடைகாலத்தில் பல்வேறு நோய்களும் தொற்றுகளும் ஏற்படுவது சகஜமானது. ஆனால், குறிப்பாக பெண்களுக்கு அவர்களது அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் சங்கடத்தை இயல்பாக வெளியே பேச தயங்குவார்கள். இதனால் பிரச்சனை முற்றிய பின்னரே மருத்துவரை அணுகுகின்றனர்.

கோடைக்காலத்தில் பெண்களின் அந்தரங்கப் பகுதியில் ஈஸ்ட் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று, எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், வெப்பமான வானிலை உடலில் ஈஸ்ட் வளர உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஈஸ்ட் தொற்று என்பது பெண்ணுறுப்பில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். அந்தரங்க உறுப்பில் எரிச்சல், திரவம் வெளியேறுவது,  கடுமையான அரிப்பு, சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் உடலுறவின் போது அதிக வலி இருப்பது என்பது ஈஸ்ட் தொற்றின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

கோடைக்காலத்தில் வானிலையில் உள்ள ஈரப்பதம், நெருக்கமான பகுதிகளில் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. காற்றோட்டம் இல்லாத மற்றும் ஈரமான பகுதிகளில் ஈஸ்ட் வளரும் என்பதால், கோடை காலத்தில் பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

வியர்வை தவிர, பல்வேறு விஷயங்கள் பூஞ்சைத் தொற்றுக்கு காரணமாகின்றன. நீரிழிவு, எச்.ஐ.வி, கர்ப்பம், அதிக எடை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பல காரணங்களால் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது.

பூஞ்சைத் தொற்று ஏற்படுவதைத் தடுக்க கோடையில் நீச்சல் உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தரங்கப் பகுதியின் pH அளவை சமநிலைப்படுத்தினால் போதுமானது.  

உங்கள் நெருக்கமான பகுதியில் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை குறைக்க மிக முக்கியமான விஷயம் காற்றோட்டமான ஆடைகளை அணிவது ஆகும். பருத்தி உள்ளாடைகளை அணிவது பூஞ்சைத் தொற்றை தடுக்கும். அதேபோல், பாலியஸ்டர் உள்ளாடைகளைத் தவிர்ப்பது நல்லது.

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அல்லது இறுக்கமான ஆடைகளை அணிந்தால், படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிக்கவும், காற்றோட்டமாக இருப்பதற்காக தூங்கும் போது உள்ளாடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.

அந்தரங்கப் பகுக்தியில் வாசனை திரவியங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் கொண்ட பாடி ஸ்ப்ரேக்கள், வாசனை திரவியங்கள், கிரீம்கள் மற்றும் சோப்புகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கு ரசாயனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

மழை மற்றும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீர் மற்றும் வாசனை இல்லாத சோப்பு கொண்டு சுத்தம் செய்யவும். அதேபோல, பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதிகளில் மட்டுமே சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.

டவுச்சிங் செய்வதைத் தவிர்க்கவும். திரவ நிலையில் இருக்கும் ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் Douche செய்வது, இடுப்பு அழற்சி நோயை உருவாக்கும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.

அதுமட்டுமல்ல, பெண்களுக்கு பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

ஈஸ்ட் வளர்ச்சியை, சர்க்கரை  ஊக்குவிக்கும் என்பதால் உங்கள் சர்க்கரையை உணவில் குறைப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது,  

பெண்கள் தங்கள் பாலியல் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படுவார்கள். இதனால் நிலைமை மோசமான பிறகுதான் மருத்துவரை அணுகுவார்கள். தாமதமாக மருத்துவரை அணுகுவதால், நிலைமை மோசமாகும், சிகிச்சை பலன் தர நாள் அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
Tags:    

Similar News