லைஃப்ஸ்டைல்
பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்வதற்கான காரணங்கள்

பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்வதற்கான காரணங்கள்

Published On 2020-12-21 06:29 GMT   |   Update On 2020-12-21 06:29 GMT
பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துஎபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் தான் தாய்மை அடைவதற்கு பிரச்சனையாக இருக்கின்றன.
உலகளாவிய பல்வேறு ஆய்வுகள் மூலம், பெண்கள் தாய்மையடைவதற்கு 20 முதல் 30 வயதே மிகச் சரியானது என்று கண்டறிந்திருக்கிறார்கள். பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இதர உறுப்புகளைவிட வேகமாக முதிர்ச்சி அடைந்துவிடுவதுதான் அதற்கு முக்கிய காரணம். இனப்பெருக்க உறுப்புகளின் முதிர்ச்சி, அவர்களது தாய்மைக்கு மிகப்பெரிய தடையாகிவிடுகிறது. அதனால்தான் இனப்பெருக்க உறுப்புகள் முழு செயல்பாட்டில் இருக்கும் 20 முதல் 30 வயது, தாய்மைக்கு ஏற்ற வயதாக கூறப்படுகிறது.

முப்பது வயதுக்குப் பிறகு கருப்பை முதிர்ச்சியடைந்து கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்கும் சூழல் தொடங்குவதால் கருத்தரிக்கும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடக்கூடும். இளம் வயதில் பெண்களின் சினைமுட்டைகள் தரமானதாக இருக்கும். 30 வயதுக்கு மேல் முட்டையின் தரம் குறையும் சூழலும், முதிர்ந்து வெடித்து வெளியே வருவதில் தாமதமும் ஏற்படலாம். இன்னொரு விஷயம் ஆண்கள் நாற்பது வயதை தொடும்போது அவர்களது உயிரணு எண்ணிக்கை, ஆற்றல் ஆகியவை குறைந்து போவதால் அதுவும் கருத்தரிப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

இரண்டாவது குழந்தை உடனே தேவையில்லை என்று கருதும் தாய்மார்கள், முதல் குழந்தை பிறந்த உடன் கருத்தடை சாதனமான காப்பர்-டி பொருத்திக்கொள்கிறார்கள். முதல் குழந்தை ஓரளவு வளர்ந்த பின்பு இரண்டாவதாக தாய்மையடைய விரும்பும்போது காப்பர்-டியை அகற்றிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் அகற்றிய அடுத்த ஒருசில மாதங்களிலே உடனடியாக தாங்கள் தாய்மையடைந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். எல்லோருக்கும் அவ்வாறு அமைந்துவிடுவதில்லை. ஆனால் காப்பர்-டியை அகற்றி ஒரு வருடம் ஆகியும் தாய்மையடையாவிட்டால் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

மதுப்பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது. ஒருசில பெண்கள் கொஞ்சமாக, எப்போதாவது குடிப்பதாக சொல்கிறார்கள். மதுவில் எதை குடித்தாலும், எந்த அளவில் குடித்தாலும் அது அவர்கள் தாய்மையடையும்போது கருவின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். கர்ப்பிணியாக இருக்கும்போது குடித்தால் மதுவில் இருக்கும் கெடுதியான ரசாயனங்கள் தாயின் ரத்தத்தின் வழியாக, வயிற்றில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டத்தில் கலந்து அதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மதுப்பழக்கத்தால் ஆண்களைவிட அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படும். அதனால் பெண்கள் மதுப்பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். மது அருந்தும் தம்பதியினர் தாய், தந்தையாகும் வாய்ப்பும் குறைந்துவிடும். அவர்களால் இல்லற இன்பத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாது.
Tags:    

Similar News