பெண்கள் உலகம்
null

சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை... உணவு மற்றும் சித்த மருத்துவத் தீர்வுகள்...

Update: 2023-01-25 06:37 GMT
  • சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது.
  • தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் கோளாறு, பாரம்பரியம் போன்றவை காரணமாக இந்த நோய் வருகின்றது. இந்தப்பிரச்சினை இருந்தால் உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய், முகத்தில் முடி வளர்வது, தலைமுடி உதிர்வது, முகப்பரு, உறக்கமின்மை, மன அழுத்தம், குழந்தையின்மை போன்றவை காணப்படலாம்.

இதற்கான உணவு மற்றும் சித்த மருத்துவத் தீர்வுகள் வருமாறு:

உணவுகள்: சோயா பீன்ஸ், எள்ளுருண்டை, வெந்தயக்களி, உளுந்தங்களி, 'பிளாக்ஸ் சீட்' எனப்படும் அலிசி விதைகளை தினசரி உணவில் எடுக்க வேண்டும்.

மருந்துகள்:

1) சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இந்த மூன்று மருந்துகளையும், சம அளவில் எடுத்து பொடித்து பனை வெல்லத்தில் சேர்த்து மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

2) அசோக மரப்பட்டை, கழற்சிக்காய் இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு மிளகு சேர்த்து பொடித்து காலை, இரவு வெந்நீர் அல்லது தேனில் மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

3) கற்றாழை ஜெல்லுடன் இஞ்சி சேர்த்து மோரில் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.

4) தினமும் பகல் வேளையில் வெண்பூசணி சாறு குடிக்கலாம்.

5) பப்பாளிப் பழச்சாறு இரவு வேளைகளில் குடிக் கலாம்.

6) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் பொடித்து காலை 2 கிராம், இரவு 2 கிராம் வீதம் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்.

7) மலைவேம்பு இலைச் சாறு 5 மி.லி. வீதம் வாரம் ஒரு முறை அதிகாலையில் குடித்து வரலாம்.

8) கழற்சிக் கொட்டை 1, மிளகு 3 இவைகளை பொடித்து பசுமோரில் கலந்து குடிக்க வேண்டும்.

9) குமரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

10) சதாவேரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

தினமும் நடைப் பயிற்சி, கருப்பை, இடுப்பு தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன அழுத்தம், சோர்வு, கவலை குறைய பிராணாயாமம், தியானம், இறை பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

Tags:    

Similar News