கிச்சன் கில்லாடிகள்
வெஜிடபிள் சமோசா

இன்று கடை ஸ்டைலில் வெஜிடபிள் சமோசா செய்யலாம் வாங்க...

Update: 2022-05-20 09:23 GMT
வெஜிடபிள் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சமோசாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்பு
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தனியா - 1/2 ஸ்பூன்
சாட் மசாலா- 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
தண்ணீர், மைதா - 3 ஸ்பூன்
உருளை கிழங்கு- 4
பெரிய வெங்காயம் - 2
பட்டாணி- 1/4 கப்பு
இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3

செய்முறை :

2 டீஸ்பூன் மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மைதா மாவுடன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, மிளகாய், பட்டாணி, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும்

பிறகு நறுக்கிய உருளைகிழங்கு, தனியா தூள், கரம் மசாலா, சீரக தூள், சாட் மசாலா,எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.

இந்த கலவை நன்றாக வெந்ததும், இறக்கி ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிசைந்து வைத்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் வட்டமாக தேய்த்து, இரண்டாக கட் செய்து, முக்கோண வடிவத்தில் சுருட்டி, உருண்டையாக செய்து வைத்த மசாலாவை அதில் வைத்து மடித்து, மைதா தண்ணீர் பசையை வைத்து ஓரங்களை ஒட்டவும்.

இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மடித்து வைத்த சமோசாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது கடை ஸ்டைலில் வெஜிடபிள் சமோசா ரெடி !!!
Tags:    

Similar News