கிச்சன் கில்லாடிகள்
மாம்பழ பாயாசம்

எளிய முறையில் செய்யலாம் மாம்பழ பாயாசம்

Update: 2022-05-31 09:21 GMT
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
பால் - ஒரு லிட்டர்,
அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
Tags:    

Similar News