கிச்சன் கில்லாடிகள்
சோயா 65

10 நிமிடத்தில் செய்யலாம் சோயா 65

Update: 2022-05-09 09:29 GMT
100 கிராம் சோயாவில் 52 கிராம் அளவிற்கு புரோட்டீன் இருக்கிறது. 13 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. சோயாவில்அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் சைவம் மட்டும் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:

மீல்மேக்கர் - 200 கிராம்
சோள மாவு - 2 டீஸ்பூன்
மைதா மாவு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கவும். பிறகு கொதிக்கும் அந்த தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு அதனை வேறு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் இல்லாமல் புழிந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் சோள மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான சோயா 65 தயார்.
Tags:    

Similar News