கிச்சன் கில்லாடிகள்
ரவா சீடை

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவா சீடை

Update: 2022-04-18 08:22 GMT
ரவையில் உப்புமா, தோசை மட்டுமின்றி விதவிதமான பலகாரங்களையும் தயார் செய்து ருசிக்கலாம். ரவையை கொண்டு சூப்பரான ஸ்நாக்ஸ் சீடை செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
ரவை - கால் கப்
ஜவ்வரிசி - அரை கப்
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
புளித்த தயிர் - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். சிறு தீயில் கடாயை வைத்து அதில் மாவை கொட்டி வறுத்தெடுக்கவும். பின்பு ஆறவைத்து சலித்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசி, ரவையுடன் தயிரை ஊற்றி ஐந்து மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

நன்கு ஊறியதும் அதனுடன் சலித்த மவை சேர்த்து கிளறவும்.

பின்னர் அதனுடன் மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், எள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டை களாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ரவா சீடை ரெடி.
Tags:    

Similar News