கிச்சன் கில்லாடிகள்
சிக்கன் ரோல்

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ரோல்

Update: 2022-04-15 09:23 GMT
சிக்கன் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிக்கன் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 500 கிராம்
மைதா - 400 கிராம்
சோயாச்சாறு, மிளகாய் சாஸ் - தலா ஒரு பெரிய தேக்கரண்டி
கேரட், குடைமிளகாய்- தலா 1
மிளகுத்தூள், எண்ணெய், நீர், உப்பு போன்றவை தேவையான அளவு
வெங்காயம் - மூன்று

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி சோயாச்சாறு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

குடைமிளகாயை நீளவடிவில் வெட்டவும்.

கேரட்டை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து அதில், கேரட், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்த சிக்கனை போட வேண்டும்.

அடுத்து மிளகாய் சாஸ், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றையும் உடனே சேர்த்திட வேண்டும். இவைகள் அனைத்தையும் நன்கு கலந்து 5 முதல் 6 நிமிடம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

மைதாவை நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய்யை ஒரு பக்கத்தில் தடவி ஒன்றின் மீது ஒன்றாக மூன்று அடுக்குகளாக வைத்து அடுக்கி, நன்கு அழுத்தி உருட்ட வேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, அதை வைத்து இருபுறமும் புரட்டிப்போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதை வெளியில் எடுத்து மூன்று அடுக்குகளையும் பிரித்தெடுக்க வேண்டும். ஒவ்வொன்றின் மத்தியிலும் இறைச்சி கலவையை வைத்து உருட்டி பக்கவாட்டு முனைகளை மூடிவிடவும். அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து, சூடாக தக்காளி அல்லது மிளகாய் சாஸ் கலந்து சுவைக்கலாம்.

தற்போது இவை பெருமளவு விற்பனையாகின்றன. இவைகளை தயார் செய்து விற்கும் தொழிலில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
Tags:    

Similar News