கிச்சன் கில்லாடிகள்
பீட்ரூட் பஜ்ஜி

சூப்பரான ஸ்நாக்ஸ் பீட்ரூட் பஜ்ஜி

Published On 2022-04-12 09:28 GMT   |   Update On 2022-04-12 09:28 GMT
வாழைக்காய், பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என்று வெரைட்டியாக சாப்பிட்ட உங்களுக்கு இன்று பீட்ரூட் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று சொல்லி தருகிறேன் வாங்க...
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்,
பீட்ரூட் - 100 கிராம்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவிற்கு
எண்ணெய் - தேவையான அளவிற்கு.

செய்முறை:


பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.

பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது).

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான பீட்ரூட் பஜ்ஜி ரெடி.
Tags:    

Similar News