கிச்சன் கில்லாடிகள்
குலுக்கி சர்பத்

சூப்பரான குளுகுளு குலுக்கி சர்பத்

Update: 2022-04-11 09:28 GMT
`நன்னாரி சர்பத், எலுமிச்சை சர்பத் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்ன `குலுக்கி சர்பத்’.. இன்று இந்த குலுக்கி சர்பத்தை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

சப்ஜா விதைகள் - 1 ஸ்பூன்,
எலுமிச்சை பழம் - 2,
பச்சை மிளகாய் - 2,
புதினா இலைகள் - 10 லிருந்து 15,
உப்பு - 2 சிட்டிகை,
சர்க்கரை - 2 ஸ்பூன்,
சோடா - 1 கப்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 1 எலுமிச்சம் பழத்தை 8 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதை எல்லாம் போட்டு கலக்குவதற்கு, அதாவது மூடி போட்டு குலுக்குவதற்கு ஒரு ஜக்கை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் ஜக்கில் சப்ஜா விதை, வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை பழத்துண்டுகள், புதினா, உப்பு, சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒன்றாக போட வேண்டும். 1/2 எலுமிச்சம் பழ சாறை இதில் பிழிந்து விடுங்கள்.

இறுதியாக தேவையான அளவு ஐஸ் கியூப் போட்டுக்கொள்ளுங்கள். கடைசியாக அதில் சோடாவை ஊற்றி ஜாக்கின் மேலே மூடி போட்டு விட்டு, நன்றாக குலுக்க வேண்டும். அதாவது சர்க்கரை கரையும் வரை குலுக்க வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்ட கூடாது. அப்படியே கிளாஸில் ஊற்றி குடித்து பாருங்கள். வெயிலுக்கு உப்பு காரம் சர்க்கரை எல்லாம் சேர்ந்த ஜில்லுனு குலுக்கி சர்பத் ரெடி!
Tags:    

Similar News