கிச்சன் கில்லாடிகள்
மாம்பழ புட்டிங்

குளுகுளு மாம்பழ புட்டிங் செய்யலாம் வாங்க...

Published On 2022-04-09 09:26 GMT   |   Update On 2022-04-09 09:26 GMT
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு மாம்பழ புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்

மாம்பழம் - 2
சர்க்கரை - அரை கப்
பால் - 1 1/4 கப்
உப்பு - 2 சிட்டிகை
சோள மாவு - கால் கப்
பால் - கால் கப்

செய்முறை

மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய மாம்பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து அரைக்கவும்.

அடுத்து பால்1 1/4 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சோள மாவில் கால் கப் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும்.

அப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

மாம்பழ விழுது திக்கான பதம் வந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி விடவும்.

திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விருப்பமான மோல்டில் ஊற்றி ஆற விடவும்.

நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான மாம்பழ புட்டிங் ரெடி.
Tags:    

Similar News