கிச்சன் கில்லாடிகள்
சேமியா சிக்கன் பிரியாணி

சூப்பரான சேமியா சிக்கன் பிரியாணி செய்யலாம் வாங்க...

Published On 2021-12-09 09:23 GMT   |   Update On 2021-12-09 09:23 GMT
சேமியாவில் கிச்சடி, பாயாசம், உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சேமியா, சிக்கன் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

சேமியா - கால் கிலோ
சிக்கன் - கால் கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை- சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தயிர் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா  - சிறிதளவு
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள்  - அரைடீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப

மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்

தாளிக்க

கிராம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய், சோம்பு

செய்முறை:

சேமியாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய், எண்ணெய் சமமான அளவில் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் முந்திரி, வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைசாறு, தயிர் சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் சிக்கனை போட்டு வதக்கவும்.

சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சோமியாவை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு தம் போடவும்.

20 நிமிடம் மிதமான தீயில் வைத்து பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சேமியா சிக்கன் பிரியாணி ரெடி.

இதையும் படிக்கலாம்...கோதுமை மாவு கருப்பட்டி தோசை
Tags:    

Similar News